Maala Karukkaliley - Ilaiyaraaja

Maala Karukkaliley

Ilaiyaraaja

00:00

04:15

Similar recommendations

Lyric

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

சேலை உடுத்தன

சோலை உனக்கொரு

மாலை இருக்கு புள்ள

ஓலை திருமண ஓலை

கொடுத்திட வேளை வருதுப்புள்ள

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

நீயும் நானும் ஒண்ணு

கேளு கேளு கண்ணு

ராகம் தாளம் போல

சேர போறோம் ஒண்ணு

சொந்தமிப்போ வந்ததில்லை

சோகங்களே கண்டதில்ல

சொக்கி மடியில

நான் விழும்போதுல சொர்க்கம்

இது போல் என்றுமில்ல

கண்ணுல தூக்கமில்ல

காரணம் கூறுபுள்ள

நெஞ்சிலே நான் விழுந்தேன்

எண்ணமோ மீளவில்லை

நேரம் முழுவதும்

நெஞ்சிலிருப்பது நீதானே

வேறில்ல

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

வேற ஜாதிமுல்ல

நானும் கன்னிபுள்ள

பாதை மாறவில்ல

பேதம் ஊருக்குள்ள

ஆயிரம்தான் சொல்லட்டுமே

வேலி ஒண்ணு கட்டட்டுமே

அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது

ஆசை இது போல் வாழட்டுமே

நெஞ்சிலே சாஞ்சிகிட்டா

நிம்மதி தேறுமையா

நித்தமும் உன் மடிதான்

பொண்ணுக்கு போதுமய்யா

நூறு தலைமுறை வாழும்

வழிமுறை நாம் காப்போம்

பூவாயி

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

சேலை உடுத்தன

சோலை உனக்கொரு

மாலை இருக்கு புள்ள

ஓலை திருமண ஓலை

கொடுத்திட வேளை வருதுப்புள்ள

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

மாலைக் கருக்கலிலே

அந்த மல்லிகை தோட்டத்திலே

- It's already the end -